தமாகா இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா 
தமிழ்நாடு

தமாகாவில் இருந்து விலகும் இளைஞரணித் தலைவர்? இபிஎஸ்ஸுடன் சந்திப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.

ஜி.கே.வாசனின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், தமாகாவின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட யுவராஜா, 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தமாகா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யுவராஜா அக்கட்சியில் இருந்து விலகும் பட்சத்தில், மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

பொங்கல் திருநாள்: சிறப்புப் பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணம்!

தொடர் மழை, வெள்ளம்! தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகள்!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

SCROLL FOR NEXT