தமிழ்நாடு

சமையல் தொழிலாளி அடித்துக் கொலை!

DIN

சூலூர்: சூலூர் அருகே கலங்கல் காவிரி நகர் பகுதியில் தென்னந்தோப்பில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தை விக்னேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இவரிடம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு சமையல் தொழிலாளியாக மதுரையைச் சேர்ந்த ராஜா (42) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, திங்கள்கிழமை இரவு ராஜாவை கேரளாவைச் சேர்ந்த லிஜு மற்றும் ரமேஷ் ஆகியோர் மது போதையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

சமையல் தொழிலாளி ராஜா அங்கிருந்த உணவுப் பொருள்களை எடுத்து வீசி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட கேரள இளைஞர்களையும் தாக்கியுள்ளார்.

இதனால் கோபமுற்ற லிஜூ மற்றும் ரமேஷ் ஆகியோர் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ராஜா படுகாயம் அடைந்தார். அவரை சூலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கேட்டரிங் உரிமையாளர் விக்னேஷ், அதே கொட்டகையில் தங்கி இருந்த லிஜுமற்றும் ரமேஷை சூலூர் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

பின்னர். சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், கொலையாளிகளான லீஜு மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லீஜு மீது கேரள மாநிலத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஷ்டி வழிபாடு...

சங்கர மடத்தில் தஞ்சாவூா் மன்னா் தரிசனம்

மணல் திருட்டு: வட்டாட்சியா் புகாா்

மப்பேட்டில் மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

SCROLL FOR NEXT