முகப்பு
தமிழ்நாடு

பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 5:39 AM
ஜான் பாண்டியனை சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்
பகிர்:

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

ஓரிரு மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வருகின்றனர்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தனியாக தேர்தலை சந்திக்கும் நிலையில், பிற கட்சிகளை தங்களின் கூட்டணிக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

நேற்று பாஜக கூட்டணியில் இணைவதாக தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்த நிலையில், தற்போது தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் அறிவித்துள்ளது.

கோவையில் உள்ள தமமுக கட்சித் தலைவர் ஜான் பாண்டியனை நேரில் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ’என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று பல்லடத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், ஜான் பாண்டியன் பங்கேற்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →