தமிழ்நாடு

அவதூறு பேச்சை தட்டிக் கேட்ட அதிமுக தொண்டர் கைது: காவல் நிலையம் முற்றுகை

அவதூறாக பேசியதை தட்டிக்கேட்ட அதிமுக தொண்டரை உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதைக் கண்டித்து அதிமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

DIN

திமுகவின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் திமுக சார்பில் திண்ணைப் பிரசாரம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம் தோறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று உத்திரமேரூரில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் வாரிய கழகத் தலைவர் லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உத்திரமேரூர் அதிமுக தொண்டர் குமார் என்பவர் கூட்டத்தில் நுழைந்து கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு நிலவியது.

இதனிடையே அவர் மீது திமுக சார்பில் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் உத்திரமேரூர் காவல்துறையினர் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தகவல் அதிமுகவினரிடையே பரவியது.

மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் உத்திரமேரூர் காவல் நிலையம் முன்பு குவிந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற அதிமுக தொண்டரை விடுவிக்கக் கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் அதிமுகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

SCROLL FOR NEXT