இனி தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசு
இனி தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமத்தை விண்ணப்பத்தாரர்கள் இன்றுமுதல் நேரில் வாங்க முடியாது என்றும், தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விரைவு அஞ்சல்மூலம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமத்தை நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்றும், தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திரும்ப வந்துவிடும், பின்னர் சரியான முகவரியுடைய தபால் உறையை விண்ணப்பத்தாரர்கள் தந்தால் பின்னர் ஓட்டுநர் உரிமம் தபாலில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த புதிய நடைமுறையால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.