தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: 15 கம்பெனி துணை ராணுவத்தினர் நாளை தமிழகம் வருகை!

மக்களவைத் தேர்தல் பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவத்தினர் நாளை(மார்ச். 1) தமிழகம் வரவுள்ளனர்.

DIN

சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக 15 கம்பெணி துணை ராணுவப் படையினர் நாளை(மார்ச். 1) தமிழ்நாடு வர உள்ளனர்.

மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் மார்ச் 7-ஆம் தேதி வர உள்ளனர். ஒரு கம்பெனிக்கு 90 துணை ராணுவப் படையினர் இடம்பெற்றிருப்பார்கள்.

இந்த 25 கம்பெனி துணை ராணுவ படையினர் எந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக காவல்துறையினருடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, யார் எந்தப் பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும்" எனக் கூறினார்.

200 கம்பெனிகள் கேட்டிருந்த நிலையில் 25 கம்பெனிகளை முதல்கட்டமாக அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT