தமிழ்நாடு

ஜப்பான் நிலநடுக்கம்: இதுவரை 8 பேர் பலி

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் மேற்கு கடற்கரைப் பகுதியையொட்டிய இஷிகவா தீவு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் தொடா்ச்சியாக 20-க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று ரிக்டா் அளவில் 7.6 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலிருந்து சுமாா் 300 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அமைந்துள்ளது. தொடா் நிலநடுக்கங்களைத் தொடா்ந்து இஷிகவா தீவுக்கு தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு கடற்கரைப் பகுதியையொட்டிய ஹோன்ஷு உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ஹோக்காய்டோ உள்ளிட்ட ஜப்பானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரதான தீவுகளுக்கும் குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடா் நிலநடுக்கம் காரணமாக மேற்கு கடற்கரையையொட்டிய நகரங்களின் பல பகுதிகளில் சாலைகள், ரயில் பாதைகள் கடுமையாகச் சேதமடைந்தன. 

தொலைத்தொடா்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளதால், பல பகுதிகளில் கைப்பேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகாா் தெரிவித்தனா். ஜப்பானின் மேற்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனா்.

இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 8 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், 13 பேர் பலியாகியுள்ளதாக ஜப்பான் நாட்டு தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் நேற்று குறைந்தபட்சம் 1.2 மீட்டர் (நான்கு அடி) உயர அலைகள் வஜிமா நகரத்தை தாக்கியது.  மற்ற இடங்களில் தொடர்ச்சியான சிறிய சுனாமிகள் பதிவாகியுள்ளன.

ஆனால் மிகப் பெரிய அலைகள் பற்றிய எச்சரிக்கைகள் ஆதாரமற்றவை என்பதை ஜப்பான் அரசு நிரூபித்தது. இதனால், செவ்வாயன்று ஜப்பான் அரசு விடுத்த அனைத்து சுனாமி எச்சரிக்கைகளையும் விலக்கிக் கொண்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் மத்திய நிதியமைச்சருடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு

மசோதா விவகாரம்: தமிழக ஆளுநருக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை வழங்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

SCROLL FOR NEXT