உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பிரதமரை சந்திக்க தில்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி!

தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை சந்தித்து அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கவுள்ளார். 

DIN

தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை சந்தித்து அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கவுள்ளார். 

இதற்காக அமைச்சர் உதயநிதி இன்று (ஜன.3) தில்லி செல்லவுள்ளார். பிரதமரைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரையும் சந்தித்து அழைப்பிதழ் வழங்கவுள்ளார். 

நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜன. 19 முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளன.

2021ம் ஆண்டிற்கு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியாணா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ம் ஆண்டிற்கு மத்தியப் பிரதேச மாநிலம்
போபாலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

கரோனா காரணமாக 2020-ல் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை சந்தித்து அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூா் மாவட்டத்தில் 43 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டம்: அமைச்சா் தகவல்

கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடியில் ஆய்வு மாளிகை

உண்டு உறைவிடப் பள்ளிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வாகனங்கள்

கல்வராயன்மலையில் ரூ.1.50 கோடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை

1,074 கிலோ கோயில் நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் வைப்பு: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

SCROLL FOR NEXT