எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

‘வெறுப்புப் பேச்சு வேண்டாம்’: அதிமுக ஐ.டி. பிரிவுக்கு இபிஎஸ் அறிவுரை

சென்னையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினருடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

DIN

சென்னை: சென்னையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினருடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், மக்களை சமூக வலைதளங்கள் மூலம் சென்றடைவது குறித்து தகவல் தொழில்நுட்ப பிரிவினருடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, சமூக வலைதளங்களில் யாரையும் அநாகரிகமாகவும், அவதூறாகவும் விமர்சிக்கக் கூடாது என்று நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இனி தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி குறித்து எந்த கட்சியிடமும் இதுவரை பேசவில்லை - நயினார் நாகேந்திரன்

OTT நிறுவனங்களுக்கு சரத்குமாரின் வேண்டுகோள்!

அக்சர் படேலுக்கு என்ன ஆனது? அணியிலிருந்து நீக்கம்! ஷாபாஸ் அகமதுக்கு வாய்ப்பு!

இரு மடங்கு உயர்ந்த தங்கம் விலை... கடந்து வந்த பாதை!

எதிர்கால தலைமுறை வளர்ச்சிக்கு கலைத்துறையின் பங்கு முக்கியம்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT