சென்னையில் கரோனா தொற்றுக்கு ஒருவர் பலி!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாட்டில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகின்றது. இதனிடையே உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாவின் புதிய திரிபான ஜெஎன்.1 தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இப்புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 760 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
தமிழகத்தில் நேற்று தகவலின்படி 29 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கரோனா தொற்று பாதித்த ஒருவர் சென்னையில் இன்று உயிரிழந்துள்ளார்.
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அவர், கடந்த டிசம்பர் 31-ல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 42 வயதான அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.