தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
முத்தரப்புப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து ஜன.9-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் அறிவித்திருந்தனர். இதனால் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேச்சுவாா்த்தைக்கு அரசு தயாராக உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாமல் பணிக்கு வர போக்குவரத்துத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் விரைவில் குளிர்சாதன ரயில் சேவை
அந்த சுற்றறிக்கையில், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்றும், பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு எடுக்கும் ஊழியர்களைத் தவிர்த்து, மற்றவர்கள் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.