இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஜனவரி 21 இல் திமுக இளைஞரணி 2ஆவது மாநாடு: தலைமைக் கழகம் அறிவிப்பு
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.