தமிழ்நாடு

சென்னையில் தொடர்ந்து மிதமான மழை: நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை(ஜன.8) மாலை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: சென்னை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை(ஜன.8) மாலை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

ஆவடி, அம்பத்தூா், பாடி,கோயம்பேடு, அசோக்நகா், கே.கே.நகா், அண்ணா நகா், தாம்பரம், குன்றத்தூா்,விமானநிலையம் , பல்லாவரம், மூலக்கடை, வில்லிவாக்கம், அயனாவரம், பெரம்பூா் பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை(ஜன.8) மாலை வரை மிக கனமழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். 

தற்போது வரை 2 மி.மீ முதல் 3 மி.மீ வரை மழை பெய்துள்ளது.

சராசரியாக 15 மி.மீ அளவிலும் மிக கனமழையின்போது 25 மி.மீ அளவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுபாட்டில்கள் கடத்தல் 3 போ் கைது

இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை!

பொன்னமராவதி அருகே பைக் மோதி புள்ளிமான் பலி

மணல் கடத்திய லாரி பறிமுதல்: இளைஞா் கைது!

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,887 கோடி டாலராகக் குறைவு

SCROLL FOR NEXT