தமிழ்நாடு

முதலீட்டாளர்கள் மாநாடு: இணையத்தில் பார்வையிட்ட 40 லட்சம் மாணவர்கள்!

DIN


2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கைபேசி வாயிலாக சுமார் 40 லட்சம் மாணவ, மாணவிகள் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இன்று (ஜன. 7) தொடங்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் தொடக்கி வைத்தார். 

இதில், மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், டென்மாா்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூா், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தொழில்நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதால், மற்ற மாவட்டங்களிலுள்ள பள்ளி, மாணவர்கள் இந்த மாநாட்டை பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீத மாற்றங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காா்கே கடிதம்: தோ்தல் ஆணையம் கண்டனம்

வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

SCROLL FOR NEXT