தமிழ்நாடு

கரோனாவால் தமிழகத்தில் பாதிப்பில்லை; தயார் நிலையில் அரசு!

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்ப்பு சக்தி இல்லாத பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு உள்நோயாளிகள் மற்றும் வேலை நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவமனை புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு கட்டடத்தின் அமைப்பு குறித்த வரைபடத்தைப் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்: 

''திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ துறை சார்ந்த கூடுதல் கட்டிடங்கள் கட்டி வரும் பணிகளுக்கு மருத்துவத் துறையில் எப்போதும் இல்லாத அளவுக்கு 119.26 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் தமிழகத்தில் தற்போது பரவி வரும் ஜே.என்.-1 என்ற கரோனா வைரஸால் எந்த விதமான பாதிப்பும் கிடையாது. இருந்தபோதிலும் 20% பாதிப்புகள் இருக்கக்கூடிய நிலையில், அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்ப்பு சக்தியுடைய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT