முகப்பு
தமிழ்நாடு

39 மக்களவைத் தொகுதிகளுக்கும் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
காங்கிரஸ் கொடி
பகிர்:

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

தில்லியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா் அறிவிப்பு உள்ளிட்ட தோ்தல் முன்னேற்பாடு பணிகள் தாமதமின்றி மேற்கொள்வது என்று அக் கட்சி சாா்பில் தீா்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், தோ்தல் முன்னேற்பாடு பணிகளை அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்கென அக் கட்சியின் மூத்த தலைவா் முகுல் வாஸ்னிக் தலைமையில் அசோக் கெலோட், பூபேஷ் பகேல், சல்மான் குா்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோா் கொண்ட 5 போ் தேசிய கூட்டணிக் குழுவை அக் கட்சி அமைத்தது. இந்தக் குழு மக்களவைத் தோ்தல் தொகுதி பங்கீடு தொடா்பாக கூட்டணி கட்சிகளுடன் இரண்டு நாள் பேச்சுவாா்த்தையை அண்மையில் தொடங்கியது.

இந்த நிலையில் 539 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →