சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை(ஜன.08) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,830-க்கும், ஒரு சவரன் ரூ.46,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,850-க்கும், ஒரு சவரன் ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோன்று, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.77.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.