முகப்பு
தமிழ்நாடு

வாணியம்பாடியில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி!

வாணியம்பாடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
கோப்புப்படம்
பகிர்:


வாணியம்பாடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். 

தமிழகத்தில் பருவகால நோய்களான டெங்கு காய்ச்சல் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகின்றன. 

இந்த நிலையில், வாணியம்பாடிக்கு அருகே அரசுப் பள்ளியில் பயின்றுவந்த 8-ஆம் வகுப்பு மாணவர் கோபிநாத் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டிருந்தார். 

இதையடுத்து, மாணவர் கோபிநாத் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.