3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவையில் 3 நாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவையில் 3 நாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம், புதுவையில் 3 நாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதியில் இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன் முதல் வெள்ளிக்கிழமை(ஜன.10-12) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு (மிமீ): மரக்காணம் (விழுப்புரம்) 190, செய்யூா் (செங்கல்பட்டு) 130, மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு) 120, திண்டிவனம் (விழுப்புரம்) 90, செஞ்சி (விழுப்புரம்) 70, செம்மேடு (விழுப்புரம்), கடவனூா் (கள்ளக்குறிச்சி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), வேளாங்கண்ணி (நாகை) தலா 60, வல்லம் (விழுப்புரம்), செங்கல்பட்டு உத்திரமேரூா் (காஞ்சிபுரம்), வாலாஜா (ராணிப்பேட்டை) தலா 50.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: புதன்,வியாழக்கிழமை(ஜன.10-11) மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதி இலங்கை கடலோரப்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.