தமிழ்நாடு

கோவை உக்கடத்தில் குறைவான பேருந்துகளே இயக்கம்: மக்கள் அவதி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

DIN

கோவை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிா்வாகிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போக்குவரத்து தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிா்வாகிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போக்குவரத்து தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் எல்.பி.எஃப்., உள்ளிட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் கோவையில் செவ்வாய்க்கிழமை 90 சதவிகிதம் பேருந்துகள் இயங்கின.தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாவது புதன்கிழமை தொடர்கிறது.

இந்த நிலையில், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து குறைவான பேருந்துகளே  இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது வரை உக்கடம் முதல் பணிமனையில் இருந்து 58 பேருந்துகளும், உக்கடம் இரண்டாம் பணிமனையிலிருந்து 66 பேருந்துகள் இயக்கப்படுவதாக  போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர். 

அனைத்து வழித்தடங்களிலும் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி செல்வோர், தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர் என அனைத்தும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதேசிக்கு முன்னுரிமை: ‘ஜோஹோ’ மின்னஞ்சலுக்கு மாறினாா் அமித் ஷா

கைலாசகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வாக்குத் திருட்டு: கையொப்பப் பிரசாரத்தில் இணைய குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு தேவேந்தா் யாதவ் கடிதம்

எம்பிபிஎஸ் கலந்தாய்வு: 200 இடங்கள் அதிகரிப்பு

பசுமை பட்டாசுகள் சிறிதளவில் தீமை விளைவிக்கும் - நிபுணா்கள் கருத்து

SCROLL FOR NEXT