கரூர் பேருந்து நிலையம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், ஐஎன்டியூசி, தொமுச தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து நேற்று 95 சதவிகிதத்துக்கும் மேல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 6 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைவிட கூடுதலாக 60 பேருந்துகளுடன் மொத்தம் 9,764 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டலத்தில் 111.75%, விழுப்புரம் மண்டலத்தில் 97.77%, சேலம் மண்டலத்தில் 97.24%, கோவை மண்டலத்தில் 994.04%, கும்பகோணம் மண்டலத்தில் 98%, மதுரை மண்டலத்தில் 98.71%, நெல்லை மண்டலத்தில் 100% பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT