முகப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை: இபிஎஸ்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை: இபிஎஸ்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

சேலம்: மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியது:

“அதிமுக விவகாரத்தில் ஓபிஎஸ்ஸின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு எல்லா வகையிலும் ஆக்கபூர்வமான பணிகளை அதிமுக செயல்படுத்தி வருகிறது.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். அதிமுக  மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. யார் விருப்பப்பட்டாலும் ராமர் கோயிலுக்கு செல்லலாம். ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன். உடல்நலம் பாதிப்பு இருப்பதால் அதை பொறுத்துதான் முடிவு செய்வேன்.

அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு நடைபெறவில்லை. அதிமுக  முறைப்படி யாரெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அதிமுக அறிவிப்புக்கு பிறகு முறையாக விண்ணப்பித்தால் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அவர்களுக்கு வாய்ப்பு தருவார்கள்.

தேர்தல் அறிவித்த பிறகு அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

தமிழக போக்குவரத்து துறையில் 22,000 பேருந்துகள் உள்ளது. ஆனால் 16,000 பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. 5,000 பேருந்துகள் பழுதடைந்து பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 3,456 பேருந்துகளில் 2,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 850 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. 

திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும்  போக்குவரத்து மானிய கோரிக்கை வரும்போது 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். ஆனால் மின்சார பேருந்துகள் இதுவரை வரவில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2,500 அறிவித்தோம். ஆனால் இந்தாண்டு திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே அறிவித்தார்கள். பரிசு பணம் குறித்து வலியுறுத்தி, அதிமுக அறிக்கை வெளியிட்ட பிறகு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.”

முழு கட்டுரையைப் படிக்க →