கோப்புப்படம் 
தமிழ்நாடு

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த இளைஞர் உயிரிழப்பு!

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி காயம் அடைந்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நடைபெற்ற மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி காயமடைந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

நிகழாண்டுக்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த ஜல்லிக்கட்டில் 559 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்பட 63 பேர் காயமடைந்தனர். 

இவர்களில், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த ஆர். மருதா (19) மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருதா, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். 

இவர், மதுரையில் இருந்து காளை ஓட்டி வந்தவர்களுடன் வந்து ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டவர். இவர் மீது வேறொரு காளை முட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை

திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT