தமிழ்நாடு

தனியார் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ: 15 மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள்!

சென்னையை அடுத்த புழல் பகுதியில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்பு 15 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

DIN

சென்னை: சென்னையை அடுத்த புழல் பகுதியில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்பு 15 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை புழல் அருகே சனிக்கிழமை  நள்ளிரவு தனியார் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் சேமிப்பு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனே கரும்புகை வர தொடங்கியதும் அக்கம் பக்கத்தினர் அவசரகால காவல்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு மீட்புத் துறைக்கு
தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் பல மணி நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், அருகில் உள்ள மாதவரம், வியாசர்பாடி, ஆவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, எழும்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதலாக 15  தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 6 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு முழு வீச்சில் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க முடியாத நிலையில், ராட்சத கிரேன்கள் மற்றும் தீயணைப்பு நவீன வாகனங்கள் மூலம் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டு தற்போது 15 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் கிடங்கில் இருந்த மிக்ஸி,கிரைண்டர்,ஏசி போன்ற எலக்ட்ரானிக்கல்  பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.

தீயில் கருகி நாசமான பொருள்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பொங்கல் திருநாள் முன்னிட்டு போகி பண்டிகை கொண்டாட்டத்தின் மூலம் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பல கோணங்களில் தீயணைப்புத் துறை,போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

நள்ளிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் புழல் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதியில் ஆம்புலன்கள் வரவழைக்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

SCROLL FOR NEXT