தமிழ்நாடு

தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது: வானிலை ஆய்வு மையம்

தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனையொட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமாஷ தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது

DIN


சென்னை: தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனையொட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமாஷ தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.21 -ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் டிச.31 வரை 458.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 442.8 மிமீ ஆகும். ஆக, இயல்பை விட 4 சதவீதம் அதிக மழைப் பொழிவு கிடைத்துள்ளது.

மேலும் ஜன.1 முதல் ஜன.11 வரை இயல்பு அளவைவிட 6.8 மிமீ கடந்து, தற்போது வரை 49. 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில், அக்.21-இல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தென்மாநிலங்களில் இருந்து ஜனவரி 15 ஆம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை ஒருநாள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை(ஜன.14) விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனையொட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமாஷ தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழத்தில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணக்கூடும்.

தென் தமிழகத்தில் வரும் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாள்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக இருக்கக் கூடும். 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை(ஜன.15) காலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

இந்திய பெருங்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT