தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பது வழக்கம்.

இதையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பாதுகாப்பு கட்டமைப்புகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை சமன் செய்தல், வாடிவாசல், மேடை, முக்கிய விருந்தினா்கள் மாடம், பாா்வையாளா்கள் மாடம் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி மாடுபிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது.  இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

இப்போட்டியில் பங்கேற்க 1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

SCROLL FOR NEXT