அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை உறுதி மொழியுடன் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6.20 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் முதலிடத்தைப் பெற்றார். 17 காளைகளை அடக்கிய அபிசித்தர் 2 ஆம் இடத்தையும், 12 காளைகளை அடக்கிய குன்னத்தூர் திவாகரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
Advertisement
Advertisement
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற கார்த்திக்கிற்கு அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.