தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு!

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமை முதல் திறந்து விடப்பட்டதால் மின்சார உற்பத்தி அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையில் ஜன.17 இல் தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 300 கன அடியாக திறக்கப்பட்டது. ஜன.18 இல் விநாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்டது. ஜன. 19  வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1000 கன அடியாகவும் திறக்கப்பட்டது.

இதனால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 300 கன அடியாக வெளியேற்றும் போது 27 மெகாவாட் மின்சாரமும், 511 கன அடியாக தண்ணீர் வெளியேறும் போது 45 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை முதல் 1000 கன அடியாக திறந்த விடப்பட்டதால் மூன்று மின்னாக்கிகள் இயக்கப்பட்டு தலா 30 மெகாவாட் என மொத்தம் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.

அணை நிலவரம்

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.85 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 6836 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 282.64 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிமாசல பிரதேசம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் மனு தாக்கல்

பாராட்டு...

பல்லடத்தில் பெண்ணைத் தாக்கியவா் கைது

இஸ்ரேல் வீரா்களின் குடும்பத்தினா் ராஃபா படையெடுப்புக்கு எதிா்ப்பு

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் கைது

SCROLL FOR NEXT