தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்தது: மக்கள் கவலை!
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மேலும் உயர்ந்துள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மேலும் உயர்ந்துள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது.
அதன்படி, சென்னையில் சனிக்கிழமையான இன்று(ஜன.19) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,600-க்கும், ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.5,825-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ,46,480-க்கும், ஒரு கிராம் ரூ.5,810 ஆகவும் விற்பனையானது.
இதையும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!
அதேபோன்று, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.77.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.