முகப்பு
தமிழ்நாடு

குடியரசு விழா: இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி புகைப்படங்கள்!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு விழாவையொட்டி, இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு விழாவையொட்டி, இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடு முழுவதும் குடியரசு நாள் வருகின்ற ஜன.26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஜன. 26 மற்றும் ஜன. 19, 22, 24 ஆகிய 4 நாள்களில் குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

முதல்நாள் ஒத்திகை நிகழ்ச்சி ஜன. 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை காரணமாக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாள்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →