கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஒரே நாளில் 21 ஆயிரம் ஆவணங்கள் பதிவு! ரூ.168 கோடி வருவாய்!!

தமிழகத்தில் ஜனவரி 22-ஆம் தேதி மட்டும் 21,004 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் ஜனவரி 22-ஆம் தேதி மட்டும் 21,004 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரூ. 168. 83 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், ஜன. 31 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய நாளில் மட்டும்  (ஜன. 22)
மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ. 168.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னையில் ஜனவரி 22-ல் 137 அடுக்குமாடி குடியிருப்புகள் பதியப்பட்டு ரூ. 12 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் புறா... காவ்யா அறிவுமணி!

இயக்குநராகும் கென் கருணாஸ்!

சரிவிலிருந்து மீட்ட டிம் டேவிட்... 109 மீட்டருக்கு சிக்ஸர்!

நானும் நாணமும்... ஜாஸ்மின் ராத்!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

SCROLL FOR NEXT