தஞ்சாவூர் கோ. சித்தர் - பொங்கலூர் கே.வெ.பழனிசாமி - அச்சுக்கட்டு கு.எழிலன் 
தமிழ்நாடு

தமிழக அரசின்  நம்மாழ்வார் விருது அறிவிப்பு!

2023 - 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட 3 விவசாயிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

DIN


தமிழக அரசின் சார்பில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக  விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 3 விவசாயிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்புச் சாவடியைச் சேர்ந்த கோ. சித்தர் முதல்பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும், திருப்பூர் மாவட்டம், பொங்கலூரைச் சேர்ந்த கே.வெ.பழனிச்சாமி இரண்டாம் பரிசா ரூ.1.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த கு.எழிலனுக்கு மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை – உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான “நம்மாழ்வார் விருதுடன்” பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT