தமிழ்நாடு

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பவதாரிணியின் பாடல்கள்! 

பாடகி பவதாரிணியின் இந்தப் பாடல்கள் மக்கள் மனதீல் நீங்கா இடம் பிடித்துள்ளன. 

DIN

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) உடல் நலக் குறைவால் காலமானார். 

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத இயற்கை சிகிச்சை பெற்று வந்ததாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.  தமிழ் சினிமாவில் சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலேயே தெரிவது தேவதையா உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். 

பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பாடகி பவதாரிணியின் இந்தப் பாடல்கள் மக்கள் மனதீல் நீங்கா இடம் பிடித்துள்ளன.

பவதாரிணியின் மறக்க முடியாத பாடல்கள்: 

காதலுக்கு மரியாதை- என்னைத் தாலாட்ட வருவாளோ

அழகி- ஒளியிலே தெரிவது 

ப்ரண்ட்ஸ்- தென்றல் வரும் 

தாமிரபரணி - தாளியே தேவையில்லை நீதான் 

ஒருநாள் ஒரு கனவு- காற்றில் வரும் கீதமே 

அநேகன் - ஆத்தாடி ஆத்தாடி 
 

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இவரது பாடல்களை பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT