பத்ம பூஷண் விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டது 
தமிழ்நாடு

பத்ம பூஷண் விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டது: பிரேமலதா

மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது என்று பிரேமலதா கூறியுள்ளார். 

DIN

மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது என்று பிரேமலதா கூறியுள்ளார். 

தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பத்ம விபூஷன் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 

விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக பெற்றிருப்போம். விஜயகாந்த் மறைந்து 30 நாள்களுக்குப் பிறகு இந்த சிறப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது. 

விஜயகாந்த் மீது அன்பு வைத்திருப்பவர்களுக்கு இந்த பத்ம பூஷண் விருதை சமர்ப்பிக்கிறோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT