தமிழ்நாடு

புதுக்கோட்டை: ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தேசியக் கொடியேற்றினார்!

புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 192 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 25. 74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெ.வே. சரவணன், ஆர். ரம்யாதேவி, வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. மஞ்சுளா ஆகியோரும்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

SCROLL FOR NEXT