அவிநாசி: சேவூர் வாலீஸ்வரர் திருக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடக்க வேண்டி திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொங்கு வட்டாரத்தில் உள்ள ஏழு சிவ தலங்களில் வைப்புத்தலமாகவும் நடு சிதம்பரம் என போற்றப்படும் பெருமைக்குரிய சேவூர் அறம்வளர்த்தநாயகி உடனமர் வாலீஸ்வரர் கோயில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ளது.
இக்கோயில் திருப்பணி நடைபெற அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி கூறும்வகையிலும் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டியும் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க: நடராஜர் கோயில் கோபுரத்தில் கொடியேற்றம்
இந்நிகழ்ச்சிக்கு அரன்பணி அறக்கட்டளை மற்றும் திருநணா சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் தலைவர் பவானி தியாகராச ஐயா தலைமை வகித்தார். திரளான மக்கள் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.