காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தை மாத பௌர்ணமியையொட்டி தெப்பல் உற்சவத்தின் இரண்டாம் நாள் விழா இன்று நடைபெறுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் பௌர்ணமியை ஒட்டி 3 நாள்கள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, தை மாதம் பௌர்ணமியை ஒட்டி வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி,மற்றும் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பச்சை பட்டு உடுத்தி, திருவாபரங்கள் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து ஆதிசேசனின் அவதாரமான அனந்த சரஸ் திருக்குளத்தை சுற்றி வந்தார்.
பின்னர் அனந்த சரஸ் திருக்குளத்தில் வாழைமரம், மாவிலை தோரணங்கள், கட்டி பூமாலைகள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருந்தேவி தாயார் உடன் வரதராஜ பெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருளி முதல் நாளான நேற்று மூன்று முறை வலம் வந்தார்.
தெப்பல் உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மாலை 5 முறையும், நாளை 7 முறையும் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் எம்பெருமாள்.
தை மாத பௌர்ணமியை ஓட்டி நடைபெற்ற பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் தெப்பல் உற்சவத்தில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அனந்தசரஸ் திருக்குளத்தின் படித்துறையில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.