தமிழ்நாடு

கடன் சுமையா?: தொழிலதிபர் வீட்டில் மூவர் பலி

DIN

சேலம் இந்திரா நகரைச்  சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் மூவர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேஸ்வரன் (54) தொழிலதிபர், அவர் மகன் ரிஷிகேஷ்வரன் (30), மகள் பூஜா (23) ஆகிய மூன்று பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மகள் கழுத்தில் காயத்துடன் படுக்கையில் இறந்த நிலையில் தந்தையும் மகனும் தூக்கில் தொங்கியவாறும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து உடல்களை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவலர்கள் அனுப்பி வைத்தனர்.

வெங்கடேஸ்வரன் தனது மகனுடன் இணைந்து நோட்டு புத்தகங்களுக்கு ஒட்டப்படும் கெமிக்கல் தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாகவும் தொழிலுக்காக அதிக கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாததால் மூவரும் வீட்டில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. 

இருப்பினும் மூன்று பேரின் இறப்பிலும் மர்மம் நீடிப்பதால் காவல்துறை தொடர்ந்து அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மிகப்பெரிய பங்களாவில் சொகுசு கார்களுடன் வாழ்க்கை நடத்தி வந்த தொழில் அதிபர் தனது மகள், மகன் ஆகியோருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT