முகப்பு
தமிழ்நாடு

தென்காசி அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி

தென்காசி  அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:12 PM
பகிர்:

தென்காசி  அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர்.

கொல்லம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புன்னையாபுரம் அருகே ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியும் காரும் நேருக்குநேர் மோதியது. 

இந்த விபத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்த ஆறு பேரும் பலியாகினர். மேலும் 2 பேர் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →