காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசுகையில் 
தமிழ்நாடு

இளைஞர்கள் பலரும் வேலையில்லாதவர்களாக உள்ளனர்: சசி தரூர்

நாட்டில் பல இளைஞர்கள் இன்னமும் வேலையில்லாதவர்களாகவே உள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார்.

DIN

நாட்டில் பல இளைஞர்கள் இன்னமும் வேலையில்லாதவர்களாகவே உள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் இரு நாள்கள் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசுகையில், பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் அதிகரித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவுக்கு வாக்களித்த இளைஞர்களில் பலர் தற்போதுவரை வேலை இல்லாதவர்களாவே உள்ளனர்.

மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை தென்னிந்தியாவில் பாஜகவுக்கான இடங்கள் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஒட்டுமொத்த அளவில் பாஜக எதிர்பாராத அதிர்ச்சியைச் சந்திக்கும். அதேவேளையில் மக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட "இந்தியா' கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT