தமிழ்நாடு

ஜப்பான் பொருளாதாரத்தை முந்திவிடுவோம்: பிரதமரின் ஆலோசகர்

ஜப்பான் நாட்டின் பொருளாதாரத்தை விரைவில் முந்திவிடுவோம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் தெரிவித்தார்.

DIN

ஜெர்மன், ஜப்பான் நாட்டின் பொருளாதாரத்தை முந்திவிடுவோம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் கலந்துகொண்டு 'உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மற்றும் எதிர்கால சவால்கள்' குறித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, “தற்போது இந்தியா மற்ற எந்த நாடுகளை விடவும் பொருளாதாரத்தில் அதிகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இப்போது சுமார் 7 சதவீத ஜிடிபி வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த 18 மாதங்களில் நாம் ஜெர்மனியின் பொருளாதாரத்தை முந்திவிடுவோம். அதற்கடுத்த 18 மாதங்களில் ஜப்பானின் பொருளாதாரத்தையும் முந்தி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுப்போம். 

வாங்கும் திறன் சமநிலையைப் பொருத்தளவில், இந்தியா ஏற்கனவே உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. எனவே உலகளவிலான பொருளாதாரத்தில் இந்தியா ஏற்கனவே மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறது. மேலும் நாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம். 

பல நாடுகள் மோசமான பின்னடைவைச் சந்தித்த கரோனாவுக்குப் பிந்தைய 2021-22 ஆம் ஆண்டுகளில் கூட இந்தியாவில் பணவீக்க நிலைமை மோசமாகவில்லை.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இந்தியப் பொருளாதாரம் நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது. அனைத்து சவால்களையும் திறம்பட கையாண்டு வருகிறோம்.” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

முதல்முறையாக ஆஸ்கருக்கு தேர்வான பப்புவா நியூ கினிய திரைப்படம்! பா.இரஞ்சித் தயாரிப்பு!

இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? - முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை! முழு விவரம்

நல்ல நாள்... ஆஷிகா ரங்கநாத்!

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

SCROLL FOR NEXT