வேங்கைவயல் வழக்கு பிப். 12க்கு ஒத்திவைப்பு 
தமிழ்நாடு

வேங்கைவயல் வழக்கு பிப். 12க்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

புதுக்கோட்டை: வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது சிபி சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். 

இதற்கான மனு மாவட்ட எஸ்சிஎஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட இம்மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து வரும் பிப்.12ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT