புதிய பாதையில் பயணிக்கும் பல்கலை.கள்: யுஜிசி தலைவர்
நாட்டின் பல்கலைக்கழங்கள் புதிய பாதையில் பயணிப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஸ் குமார் தெரிவித்தார்.
நாட்டின் பல்கலைக்கழங்கள் புதிய பாதையில் பயணிப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஸ் குமார் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.
கல்விச் சிந்தனை அரங்கில், ஒழுங்குமுறை அமைப்புகள் என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஸ் குமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:
“மாணவர்களிடையே அடிப்படை கல்வியறிவை மேம்படுத்துதல், கல்வியில் எண்ம தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், எதிர்காலத்தினருக்கு கல்வியை எளிதாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
இதில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, திறன், கலாச்சாரம், ஒருங்கிணைப்பு, தலைமைத்துவம், பாடத்திட்டம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.
கடந்த 70 ஆண்டுகளாக மாற்ற இயலாத தன்மையை கல்விக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்த பல்கலைக்கழக அமைப்பு, இப்போது புதிய பாதையில் பயணிக்கும் தருணத்தில் உள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் செயல்படுத்துவதற்கான நிதி சிக்கல்கள் போன்றவை ஒப்புக்கொள்கிறேன், அதே வேளையில், நமது கல்வி முறை புதுமைகளை நோக்கி நகர்வது இன்றியமையாதது.
தேசிய கல்விக் கொள்கையானது உயர்கல்வி ஆணையத்தை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கிறது. அது நிறுவப்பட்டால், பொதுவான சீர்திருத்தங்களை செய்ய முடியும்.
உயர்தர கல்வியை எளிதாகவும், மலிவாகவும் வழங்க எண்ம தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியம். அடுத்தாண்டு 50 லட்சம் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பயிற்சி வழங்கப்படவுள்ளது.” என்று தெரிவித்தார்.