தமிழ்நாடு

நாட்டில் 50% மருத்துவ பேராசிரியர்கள் பற்றாக்குறை: இந்திய மருத்துவ சங்க தலைவர்

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகிதம் மருத்துவ பேராசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் சரத் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

DIN

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகிதம் மருத்துவ பேராசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் சரத் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ படிப்பு குறித்து மருத்துவர்கள் சரத் குமார் அகர்வால், சுதா சேஷய்யன் மற்றும் சச்சிதானந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சரத் குமார் அகர்வால் பேசியது:

“நம் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு பாடத்திட்டம் உருவாக வேண்டும். இந்தியாவில் உள்ள மொத்தம் 700 மருத்துவக் கல்லூரிகளில் 1.1 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், 50 சதவிகிதம் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.” என்றார். 

சாஸ்திரா பல்கலை. இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன் பேசியது: 

“மருத்துவ மாணவர்கள் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று சேவையாற்றும் வகையில் பாடத்திட்டங்களில் புகுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் அனைத்து அதிநவீன சாதனங்களுடன் நோயாளிகளை அணுகுவதும், கிராமப் புறங்களில் தனி ஆளாக நோயாளிகளை அணுகுவதற்கும் வித்தியாசம் உள்ளது” என்று தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மருத்துவர் எஸ். சச்சிதானந்த் பேசியது:

“மருத்துவ ஆசிரியர்களின் உழைப்பு, செலவழிக்கும் நேரத்துடன் ஒப்பிடுகையில் வழங்கப்படும் ஊதியம் குறைவு.

பல நுழைவுத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து மாணவர்களை ‘நீட்’ காப்பாற்றியுள்ளது. ஆனால், பொதுத்தேர்வின் மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

முதல்முறையாக ஆஸ்கருக்கு தேர்வான பப்புவா நியூ கினிய திரைப்படம்! பா.இரஞ்சித் தயாரிப்பு!

இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? - முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை! முழு விவரம்

நல்ல நாள்... ஆஷிகா ரங்கநாத்!

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

SCROLL FOR NEXT