தமிழ்நாடு

மாதவரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடக்கிவைத்தார்!

DIN

மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

வடசென்னை மக்களின் வசதிக்காக தென் மாவட்டங்களுக்கு செல்ல  20% பேருந்துகளை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் சிவசங்கர் தொடக்கிவைத்தார். 

இந்நிகழ்வில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மாதவரம் பேருந்து முனையத்திலிருந்தும் திருச்சிக்கு 18, சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, கடலூா் வழியாக புதுச்சேரி, திண்டிவனத்துக்கு 5, புதுச்சேரிக்கு திண்டிவனம் வழியாக 10, செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 22, போளூா் மற்றும் வந்தவாசி ஊா்களுக்கு 20 என மொத்தம் 160 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

குஜராத்: நர்மதா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பலி

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 30 வரை நீட்டிப்பு!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

SCROLL FOR NEXT