முகப்பு
தமிழ்நாடு

திருப்பதியில் இபிஎஸ் குடும்பத்துடன் வழிபாடு!

திருப்பதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வழிபாடு செய்தார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:11 PM
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வழிபாடு செய்தார். 

எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி மலைக்கு வருகை தந்தார். இவரை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து புஷ்கரணி அருகே உள்ள வராக சாமி கோயில் மற்றும் மாட வீதியில் உள்ள ஹயக்ரீவர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்தார். 

இதையடுத்து, இன்று காலை அஷ்டதள பாத பத்மாராதனையில் கலந்துகொண்டு ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனம் செய்தபின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

தரிசனத்திற்குப் பின்னர், அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர் யார் விரும்பினாலும் வழிபாடு செய்யலாம் என இபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →