கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஆட்டோக்கள் எல்லை தாண்டினால் இனி அபராதம் இல்லை!

சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை அண்டை மாவட்டங்களிலும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

DIN


சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை அண்டை மாவட்டங்களிலும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் வரை ஆட்டோக்களை இயக்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட எல்லைகளைத் தாண்டி ஆட்டோக்கள் இயக்கப்படும்போது அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கான எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதால், எல்லைத் தாண்டியதாக ஆட்டோக்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது.

சென்னை எழும்பூரில் நம்ம யாத்ரி என்ற புதிய ஆட்டோ செயலி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் சி.எம்.டி.ஏ. எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.   அதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

சம்-சம் லட்கியே... நிகிதா சர்மா!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

SCROLL FOR NEXT