தமிழ்நாடு

மழலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் தேவை: சுவாமி மித்ரானந்தா

மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்க பரிந்துரைப்பதாக சுவாமி மித்ரானந்தா தெரிவித்தார்.

DIN

மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்க பரிந்துரைப்பதாக சுவாமி மித்ரானந்தா தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்வியில் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து சென்னையைச் சேர்ந்த ஆன்மீக ஆசிரியர் சுவாமி மித்ராநந்தா கலந்து கொண்டு பேசினர்.

சுவாமி மித்ராநந்தா பேசியது:

“கோபம், குற்ற உணர்வு, தோல்வி போன்ற உணர்ச்சிகளை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள பாடத்திட்டத்தில் முறையான அணுகுமுறை இல்லை.

மழலையர் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். குழந்தைகளை உற்றுநோக்கி புரிந்து கொள்ளும் நபர்களை கண்டறிவது அவசியம்.

இன்றைய சூழலில் ஒருவரின் கவனத்தை 2 அல்லது 3 நிமிடங்கள் நிலைநிறுத்துவதே சவாலாக உள்ளது. செல்போன்கள் உற்றுநோக்கி கவனிக்கும் திறனை குறைத்துள்ளது.

செல்போன் போன்ற சாதனங்களில் இருந்து மக்கள் தங்களை துண்டித்துக் கொள்ள வேண்டும். சூரிய உதயத்தை பார்ப்பது போன்ற இயற்கை நிகழ்வுடன் இணைய வேண்டும்.” எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT