முகப்பு
தமிழ்நாடு

அரக்கோணம் அருகே கத்திமுனையில் மதுக்கடையில்  ரூ.44 ஆயிரம் கொள்ளை!

அரக்கோணம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் பணியில் இருந்த ஊழியரை கத்தியை  காண்பித்து மிரட்டி ரூ.44 ஆயிரம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:10 PM
பகிர்:


அரக்கோணம்: அரக்கோணம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் பணியில் இருந்த ஊழியரை கத்தியை  காண்பித்து மிரட்டி ரூ.44 ஆயிரம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள புன்னை கிராமத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை இயங்கி வருகிறது. 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மதுக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அங்கு மது வாங்கியுள்ளனர். 

அப்போது அந்த இருவரில் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து கத்தியை காண்பித்து அங்கிருந்த ஊழியர் சிவக்குமாரை மிரட்டி பணத்தை கேட்டுள்ளார். இதில் பயந்த சிவக்குமார் அங்கிருந்த ரூ.40 ஆயிரத்தை அந்த நபரிடம் கொடுத்தவுடன் அவர் அதை வாங்கிக்கொண்டதும் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து  நெமிலி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், நெமிலி  போலீசார் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →