கொலையான தந்தை மாதவன், கொலையாளி சதீஷ்குமார். 
தமிழ்நாடு

செலவுக்கு பணம் கொடுக்காத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

செலவுக்கு பணம் கொடுக்காத தந்தையை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

விராலிமலை: செலவுக்கு பணம் கொடுக்காத தந்தையை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரை சேர்ந்தவர் மாதவன் (55), கம்பிக் கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. முத்த மகன் இறந்து விட்டார். 

இந்த நிலையில் இவரது கடைசி மகன்  சதீஷ்குமார் (30) பி.இ.பட்டதாரி. அயல்நாட்டில் சிறிது காலம் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பிய சதீஷ்குமார் சிறிது காலம் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது அண்ணன் மஞ்சள் காமாலை தாக்கி இறந்துள்ளார். அது முதல் இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஒன்றரை வருடமாக சொந்த ஊர் பரம்பூருக்கு வந்து தந்தை நடத்தி வரும் இரும்புக் கடையில் அவருக்கு துணையாக இருந்துள்ளார். மேலும், மனநலம் பாதிப்புக்கு மாத்திரை உண்டு வந்த அவர் சில நாள்களாக மாத்திரை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த தந்தை மாதவனிடம் இன்று காலை செலவுக்கு பணம் கேட்டு சதீஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். தர மறுத்த தந்தையை அவர் அருவாளால் வெட்ட முயன்றுள்ளார்.

இதற்கு பயந்து வீட்டில் இருந்து வெளியே சாலைக்கு ஓடி வந்த மாதவனை துரத்தி வந்து சதீஷ்குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு வீட்டுக்குள் போய் அமர்ந்து விட்டார்.

மகனே தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் பரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த அன்னவாசல் காவல் துறையினர் குற்றவாளி சதீஷ் குமாரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! மக்கள் மலர் தூவி பிரியாவிடை!

கல்கி - 2: தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை?

நோயெதிர்ப்பு சக்தி! ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

பார்சிலோனா அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான 8 அணிகள்!

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

SCROLL FOR NEXT